ஹரி இயக்கத்தில் முதல் முறையாக கவுதம் மேனன்...

16 ஐப்பசி 2023 திங்கள் 15:26 | பார்வைகள் : 8354
இயக்குனர் கவுதம் மேனன் படங்களை இயக்குவதை தாண்டி கடந்த சில ஆண்டுகளாக பிஸியாக நடித்து வருகிறார். தற்போது விஜய்யுடன் லியோ படத்தில் நடித்துள்ளார். மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 34வது படத்தில் நடித்து வருகிறார். பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகியோர் இப்படத்தில் நடிப்பதைத் தொடர்ந்து இப்போது கவுதம் மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக இந்த படப்பிடிப்பு காரைக்குடி, தூத்துக்குடி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சில நாட்களாக இதன் கிளைமாக்ஸ் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1