Paristamil Navigation Paristamil advert login

பட்டினி குறியீடு ஆய்வு: ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்படும் அளவுகோல், நமக்கு பொருந்தாது

பட்டினி குறியீடு ஆய்வு: ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்படும் அளவுகோல், நமக்கு பொருந்தாது

16 ஐப்பசி 2023 திங்கள் 18:47 | பார்வைகள் : 10129


பட்டினி குறியீடு ஆய்வில் பின்பற்றப்பட்ட அளவுகோல்கள், நமது நாட்டுக்கு பொருந்துவதாக இல்லை என்று மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

உலகளாவிய பட்டினி குறியீடு தரவரிசை கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. 125 நாடுகள் கொண்ட பட்டியலில், இந்தியா 111-வது இடத்தில் பின்தங்கி இருந்தது. இந்தியாவில் ஊட்டச்சத்து பற்றாக்குறை இருப்பதாக அதில் கூறப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டி.யில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவிடம் இதுகுறித்து மாணவர்கள் கேட்டனர். அதற்கு மன்சுக் மாண்டவியா கூறியதாவது:-

ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் உடல், மரபணு கட்டமைப்பு வெவ்வேறாக உள்ளது. ஊட்டச்சத்து பற்றாக்குறையை கணக்கிடும் முறையிலும் மாறுபாடு இருக்கும்.

ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்படும் அளவுகோல், நமக்கு பொருந்தாது. அதுபோல், இந்த ஆய்வில் பின்பற்றப்பட்ட அளவுகோல்கள், நமது நாட்டுக்கு பொருந்துவதாக இல்லை. இருப்பினும், இதுபற்றி ஆய்வு செய்து வருகிறோம்."

இவ்வாறு அவர் கூறினார்

வர்த்தக‌ விளம்பரங்கள்