உலக நாடுகளை எச்சரிக்கும் ஹமாஸ் தளபதி - அதிர்ச்சி தகவல்
12 ஐப்பசி 2023 வியாழன் 08:28 | பார்வைகள் : 12180
ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி வருகின்றது.
ஹமாஸ் தரப்பிலிருந்து முழு உலக நாடுகளையும் எச்சரிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், ஹமாஸ் அமைப்பின் தளபதிகளில் ஒருவரான Mahmoud al-Zahar என்பவர், இஸ்ரேல் எங்கள் முதல் இலக்கு மட்டுமே. ]
முழு உலகையும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம் என எச்சரிக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
பூமியின் மொத்த 510 மில்லியன் சதுர கிலோமீற்றர் பரப்பும் ஒரு அமைப்பின்கீழ் கொண்டுவரப்படும்.
அப்போது பூமியில் அநீதியோ, அடக்குமுறையோ, பாலஸ்தீனியர்களைக் கொல்லுதலோ, லெபனான், சிரியா, ஈராக் மற்றும் பிற நாடுகளில் உள்ள அரேபியர்களுக்கெதிரான குற்றச்செயல்களோ இருக்காது என்று கூறியுள்ளார் Mahmoud al-Zahar.
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தும் நேரத்தில் இந்த வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ஹமாஸ் தாக்குதலில் பல அமெரிக்கர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
ஹமாஸ் ஆயுதக்குழு, அமெரிக்க இஸ்ரேலியர்கள், பிரித்தானிய இஸ்ரேலியர்கள், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் பெண்ணை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan