Paristamil Navigation Paristamil advert login

அமைச்சர் ஆகிறார் அப்பாவு?

அமைச்சர் ஆகிறார் அப்பாவு?

12 ஐப்பசி 2023 வியாழன் 06:54 | பார்வைகள் : 9929


சபாநாயகர் அப்பாவுவை அமைச்சராக்க, முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி, ராதாபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற அப்பாவு, சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். சில விஷயங்களில், அவர் தெரிவிக்கும் கருத்துக்களால், சபையில் விவாதம் நீண்டு விடுகிறது; கூட்ட நேரம் அதிகரிக்கிறது. இதுகுறித்து, மூத்த அமைச்சர்கள் சிலர், முதல்வரிடம் எடுத்து கூறியுள்ளனர். 

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், நெல்லைக்கு பிரதிநிதித்துவம் தரும் வகையில், அப்பாவுவை அமைச்சராக்கி, சபாநாயகராக வேறு யாரையாவது அமர்த்தலாம் என, முதல்வர் ஆலோசனை செய்து வருகிறார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்