அஜித் நடிக்க இருக்கும் அடுத்த பட இயக்குனர் இவரா?
11 ஐப்பசி 2023 புதன் 15:30 | பார்வைகள் : 8949
அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன.
அஜித் நடிப்பில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த படத்தின் நாயகிகளாக த்ரிஷா மற்றும் ரெஜினா நடித்து வருவதாகவும் முதல்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாக இணையத்தில் ஒரு தகவல் கசிந்து கொண்டிருக்கிறது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஏற்கனவே அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற திரைப்படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். அப்போது அவர் அஜித்துக்கு ஒரு கதை கூறியதாகவும், அந்த கதையில் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான ’மார்க் ஆண்டனி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தின் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது போக போக தான் பார்க்க வேண்டும். அஜித் ஒரு படத்தை முடித்தவுடன் தான் அடுத்த படத்திற்கான கதையை கேட்பார் என்ற நிலையில் இந்த தகவல் உண்மையா? அல்லது வதந்தியா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan