யூத மதத்துக்கு எதிராக இருபதுக்கும் மேற்பட்ட தாக்குதல்கள்! - உள்துறை அமைச்சர் கண்டனம்!

9 ஐப்பசி 2023 திங்கள் 20:00 | பார்வைகள் : 14554
பிரான்சில் கடந்த இரண்டு நாட்களில் யூத மதத்துக்கு எதிராக இருபதுக்கும் மேற்பட்ட தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம் ஆரம்பித்துள்ள நிலையில், பிரான்சில் யூத மதத்துக்கு எதிரான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. இந்த இரண்டு நாட்களில் பிரான்சின் எல்லா பக்கங்களிலும் யூத மதத்துக்கு எதிரான வாசகங்களை எழுதி வைப்பதும், எதிர்ப்பு இலட்சணைகளை வரைவதும் என இருபதுக்கும் மேற்பட்ட தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சர் Gérard Darmanin இன்று தெரிவித்தார்.
இரண்டு நாட்களில் பத்துப்பேர் கைது செய்யப்பட்டதாகவும், இது போன்ற தாக்குதல்களுக்கு எதிராக ஜொந்தாமினர், காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் அறிவித்தார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1