பரிஸ் : அமெரிக்க சுற்றுலாப்பயணியை தாக்கி சங்கிலி பறிப்பு!

9 ஐப்பசி 2023 திங்கள் 16:18 | பார்வைகள் : 13921
அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவரை தாக்கப்பட்டு அவரது கழுத்துச் சங்கிலி கொள்ளையிடப்பட்டுள்ளது.
பரிஸ் 1 ஆம் வட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமைக்கும் திங்கட்கிழமைக்கும் இடைப்பட்ட இரவில் rue du Jour வீதியில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 2 மணி அளவில் குறித்த வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த குறித்த சுற்றுலாப்பயணியை வழிமறித்த கொள்ளையன் ஒருவன், அவரை கத்தியால் தாக்கியுள்ளான். பின்னர் அவர் அணிந்திருந்த கழுத்துச் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான்.
பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பல இடங்களில் இழை போடப்பட்டது. அவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் எனவும், சில நாட்களுக்கு முன்னதாகவே பரிசுக்கு வருகை தந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1