படங்களில் ஒப்பந்தமாகி உள்ள ஜோவிகா.!
9 ஐப்பசி 2023 திங்கள் 12:07 | பார்வைகள் : 8186
'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் அதிகம் கவனிக்கப்படுகிறவர் ஜோவிகா. படிப்பு குறித்து அவர் நடிகை விசித்ராவுடன் மோதியது டிரண்டாகி உள்ளது. ஜோவிகாவுக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தனது மகள் ஜோவிகா இரண்டு படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்ததும் படங்களில் நடிப்பார் என்றும் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: சின்ன வயதில் இருந்தே ஜோவிகாவுக்கு சினிமாதான் உலகம். அதனால்தான் படிப்பு போதும் நடிப்புதான் இனி என்று முடிவெடுத்தாள். சினிமா கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினாள். என்னிடம் 2 கார்கள் இருந்தும் அவளை மெட்ரோ ரயிலில்தான் பார்த்திபன் அலுவலகத்திற்கு அனுப்புவேன். அப்போதுதான் ஒரு உதவி இயக்குனரின் வலி அவளுக்குத் தெரியும்.
ஜோவிகா 'பிக் பாஸ்' செல்லும் முன்னரே இரண்டு படங்களில் ஹீரோயினாக நடிக்கவும் கமிட்டாகி விட்டார். ஒரு தமிழ் படம், ஒரு தெலுங்கு படத்தில் ஜோவிகா ஹீரோயினாக நடிக்க கமிட்டான பின்புதான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதை சொல்வதில் எனக்குப் பெருமை. இவ்வாறு வனிதா கூறியுள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan