பிரான்சில் ஓய்வூதிய சீர்திருத்தம் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பம்.

9 ஐப்பசி 2023 திங்கள் 09:28 | பார்வைகள் : 14078
இந்த ஓய்வூதிய சீர்திருத்தம் Emmanuel Macron தலைமையில் அமைந்த அரசு அளித்த வாக்குறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சீர்திருத்ததால் ஒய்வூதியம் பெறும் 1800 000 பேர் 100€ 'euros brut' யூரோக்கள் வரை இனிவரும் காலங்களில் பயன் அடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் சார்ந்த பணிபுரியும் CNAV அமைப்பு இன்றைய நிலையில் ஓய்வூதியம் பெறும் ஒவ்வொருவரின் ஓய்வூதிய கணக்கையும் மறுபரிசீலனை செய்து அவர்களுக்கான ஓய்வூதிய உயர்வை வழங்கும், இந்த உயர்வு குறைந்த ஓய்வூதியம் பெறுவோருக்கே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக ஓய்வூதியம் பெறுபவர்கள் தமது பணிக்காலம் முழுவதும் முழுமையான நேர வேலையைச் செய்திருத்தல் வேண்டும், குறைந்த நேர வேலை செய்தவர்களுக்கு இந்த ஓய்வூதிய உயர்வு வழங்கப்பட்டமாட்டாது. எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏறத்தாழ ஓய்வூதியம் பெறுபவர் தன் வாழ்நாளில் 40 ஆண்டுகள் முழுநேரமும் வேலை செய்திருந்தால் ஓய்வூதிய உயர்வோடு சேர்த்து மாதம் ஒன்றுக்கு 1200€ யூரோக்கள் வரை ஓய்வூதிய பணம் பெறமுடியும் என அறியமுடிகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1