Paristamil Navigation Paristamil advert login

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் 4 பிள்ளைகளின் தாய் பலி

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் 4 பிள்ளைகளின் தாய் பலி

10 ஐப்பசி 2023 செவ்வாய் 13:36 | பார்வைகள் : 7184


வவுனியா - பம்பைமடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துயர சம்பவம் இன்று இடம்பெற்றது.

விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இன்று செவ்வாய்க்கிழமை  வவுனியா குருக்கல் புதுக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பம்பைமடு பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில் 
மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குருக்கள் புதுக்குளத்தை சேர்ந்த 44வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயாரான விஜயரத்தினம் ஜெயந்தினி என்பவர் உயிரிழந்துள்ளார்.

மகன் மருத்துவமனையில் இதன் போது இவருடன் பயணித்த உயிரிழந்தவரின்  மகனான 22வயதுடைய சிங்றோஜன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்திற்குள் வவுனியாவில் ஏற்பட்ட இரு வேறு விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் இரு விபத்துமே கட்டாக்காலி மாடுகளினால் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்