100 பதக்கங்கள் வென்று வரலாற்று சாதனை படைத்த இந்தியா!
.jpeg)
7 ஐப்பசி 2023 சனி 09:44 | பார்வைகள் : 6976
2023ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 100 பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
சீனாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளை ஒப்பிடும்போது இம்முறை இந்தியா பதக்கங்களை அதிரடியாக கைப்பற்றி வருகிறது.
அத்துடன் முதல் முறையாக 100 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதில் 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். இதன்மூலம் இந்தியா பதக்கப் பட்டியலில் 4வது இடத்தில் நீடிக்கிறது.
சீனா 358 பதக்கங்களுடன் (188 தங்கம்) முதல் இடத்திலும், ஜப்பான் 170 பதக்கங்களுடன் (47 தங்கம்) இரண்டாவது இடத்திலும், தென் கொரியா 171 பதக்கங்களுடன் (36 தங்கம்) மூன்றாவது இடத்திலும் உள்ளன.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1