இஸ்ரேலில் காணாமல் போன பிரெஞ்சு மக்கள் - 250 வரையான தொலைபேசி அழைப்புகள் பதிவு!
9 ஐப்பசி 2023 திங்கள் 07:00 | பார்வைகள் : 13764
இஸ்ரேலில் வசிக்கும் பிரெஞ்சு மக்கள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தை தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து நேற்று ஒருசில மணிநேரங்களில் 250 தொலைபேசி அழைப்புக்கள் பதிவாகியிருந்தன.
பொதுமக்களால் தங்களது உறவினர்கள் குறித்த பல்வேறு கேள்விகள், உதவிகள் கோரப்பட்டிருந்தன. வெளியுறவுத்துறை அமைச்சகத்தினால் தேடப்படுபவர்களின் விபரங்கள் கோரப்பட்டிருந்தது.
இஸ்ரேலில் வசிக்கும் பிரெஞ்சு மக்களில் ஏழு பேர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும், அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதேவேளை, பாலஸ்தீன பயங்கரவாதிகளால் பலர் கடத்தப்பட்ட நிலையில், அவர்களில் பிரெஞ்சு மக்களும் இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.
‘இஸ்ரேலில் காணாமல் போயுள்ள பிரெஞ்சு மக்கள் தொடர்பில் விபரங்களை சேகரிக்க அரசு முயல்கிறது!” என வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பேச்சாளர் Anne-Claire Legendre தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan