காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற இளைஞன் - விபத்தில் பலி!
8 ஐப்பசி 2023 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 12905
மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த இளைஞன் ஒருவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர். ஆனால் கட்டுப்பாட்டை மீறி பயணித்த இளைஞன் விபத்துக்குள்ளாகி பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் Saint-Priest (Rhône) நகரில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. 23 வயதுடைய இளைஞன் ஒருவர் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்துள்ளார். வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் இளைஞனை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.
ஆனால் காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் செல்லும் நோக்கோடு அதிவேகமாக பயணித்த குறித்த இளைஞன் சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானார்.
வீதியின் அருகே இருந்த தடுப்பு சுவற்றுடன் மோதி படுகாயமடைந்ததுடன், சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan