கிறிஸ்மஸ் விடுமுறைக்கான பயணச்சிட்டைகள் இன்று முதல் விற்பனையில்..

4 ஐப்பசி 2023 புதன் 09:37 | பார்வைகள் : 10409
இவ்வருடத்துக்கான கிறிஸ்மஸ் விடுமுறைக்கான பயணச்சிட்டைகளின் விற்பனை இன்று புதன்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது. டிசம்பர் 10 ஆம் திகதி முதல் ஜனவரி 9 ஆம் திகதி வரையான விடுமுறை நாட்களுக்கான பயணச்சிட்டைகளே இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளதாக தொடருந்து நிறுவனமான SNCF அறிவித்துள்ளது. TGV மற்றும் Intercités தொடருந்துகளுக்கான பயணச்சிட்டைகளும், Ouigo தொடருந்துகளின் குறைந்த விலை பயணச்சிட்டைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Ouigo சேவைகளின் பயணச்சிட்டைகளை 2024 ஆம் ஆண்டின் ஜூலை 5 ஆம் திகதி வரை முன்பதிவு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பெப்ரவரி 10 ஆம் திகதி முதல் மார்ச் 24 ஆம் திகதி வரையான நாட்களுக்கான பயணச்சிட்டைகள் வரும் நவம்பர் 15 ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1