ஆற்றில் இருந்து அகதியின் சடலம் மீட்பு!
2 ஐப்பசி 2023 திங்கள் 10:56 | பார்வைகள் : 14745
அகதிகள் முகாமிற்கு அருகே உள்ள ஆற்றில் இருந்து அகதி ஒருவரின் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பிரான்சின் வடக்கு பகுதியான Loon-Plage (Nord) நகரில் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. அங்குள்ள புகழ்பெற்ற canal de Bourbourg ஆற்றில் இருந்து அகதிக் ஒருவரின் சடலம் Dunkerque மாவட்ட காவல்துறையினரால் மீட்கப்பட்டது.
குறித்த ஆற்றுப்பகுதி அருகே அமைந்துள்ள அகதிகள் முகாம் ஒன்றில் தங்கியிருந்த அகதி ஒருவரின் சடலமே அது என உறுதி செய்யப்பட்டுள்ளது. தாக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா அல்லது தற்கொலை என இன்று இடம்பெற உள்ள உடற்கூறு பரிசோதனைகளின் பின்னரே தெரியவரும் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan