துப்பாக்கி, போதைப்பொருட்களுடன் சிறுவன் கைது!
3 ஐப்பசி 2023 செவ்வாய் 18:51 | பார்வைகள் : 14818
துப்பாக்கி, கஞ்சா மற்றும் கொக்கைன் போன்ற போதைப்பொருட்களுடன் 15 வயதுடைய சிறுவன் ஒருவன் மார்செய் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான்.
குற்றவியல் தடுப்பு காவல்துறையினர் நேற்று திங்கட்கிழமை Parc-Kalliste தோட்டத்தில் வைத்து இருவரைக் கைது செய்தனர். போதைப்பொருள் விற்பனையாளர்கள் அதிகளவில் கூடும் இடம் அது என்பதால் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வருகை தந்த இருவரையே காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடத்தில் 357 Magnum கலிபர் வை துப்பாகியும், கொக்கை மற்றும் கஞ்சா போதைப்பொருளும் இருந்துள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் 15 வயதுடைய சிறுவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்செய் நகரில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், தற்போது சிறுவர்களும் இதுபோல் குற்றச்செயலில் ஈடுபட்டு அவ்வப்போது கைது செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan