தளபதி 68’ படம் தொடர்பில் வெங்கட் பிரபுவின் அதிரடி அறிவிப்பு!
3 ஐப்பசி 2023 செவ்வாய் 09:54 | பார்வைகள் : 10758
தளபதி 68 படம் தொடங்கப்பட்டுள்ளதாக வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
லியோ படத்திற்கு பிறகு விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்க இருக்கிறார். தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்படப்பட்டுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்க இருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படத்தின் பூஜை நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்கள் அன்புடனும் வாழ்த்துக்களுடனும் தளபதி 68 தொடங்கியது. இந்த படம் வேடிக்கை நிறைந்த ரோலர் போஸ்டர் இருக்க போகிறது. படத்தின் பூஜை சம்பந்தமான புகைப்படங்கள் மற்றும் அப்டேட்டுகள் நம்ம லியோ படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan