Paristamil Navigation Paristamil advert login

சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற சிறுவர்கள் - பெல்ஜியத்தில் கைது!!

சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற சிறுவர்கள் - பெல்ஜியத்தில் கைது!!

3 ஐப்பசி 2023 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 13138


Quiévrechain (Nord) சிறைச்சாலையில் இருந்து இரு சிறுவர்கள் தப்பிச் சென்ற நிலையில், அவர்கல் பெல்ஜியத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒக்டோபர் 1 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு குறித்த சிறைச்சாலையில் இருந்து 17 வயதுடைய இரு சிறுவர்கள் தப்பிச் சென்றனர். அவர்கள் ஆயுத முனையில் கொள்ளை மற்றும் பாலியல் வன்புணர்வு மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். 

இந்நிலையில், சிறைச்சாலை கம்பியினை வெட்டிக்கொண்டு அதன்வழியாக அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். கம்பியை வெட்டுவதற்குரிய கருவி ஒன்று அங்கு கண்டெடுக்கப்பட்டது. 

இந்நிலையில், நேற்று ஒக்டோபர் 2 திங்கட்கிழமை இரவு குறித்த இருவரும் பெல்ஜியத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவருக்கும் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 150,000 யூரோக்கள் குற்றப்பணமும் அறவிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்