Val-de-Marne : இரு பெண்களை மோதித்தள்ளிய மகிழுந்து!
2 ஐப்பசி 2023 திங்கள் 21:26 | பார்வைகள் : 20271
வீதியை கடக்க முற்பட்ட இரு பெண்களை மகிழுந்து ஒன்று மோதித்தள்ளியுள்ளது. படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Villeneuve-Saint-Georges (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும், அவருடைய 18 வயதுடைய மகளும் வீதியினை கடக்க முற்பட்ட வேளையில், அதி வேகமாகச் சென்ற மகிழுந்து ஒன்று அவர்களை மோதியுள்ளது. rue Pasteur வீதியில் உள்ள பாதசாரிக்கடவையில் இச்சம்பவம் பிற்பகல் 2 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
மகிழுந்து சாரதி மகிழுந்தை நிறுத்த முற்பட்டும், அவர்கள் இருவரையும் மோதியுள்ளது. அதிவேகமாக பயணித்ததே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் இரு பெண்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இளம் பெண்ணின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan