மக்ரோனின் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் - தோல்வியில் முடிந்தது!
30 புரட்டாசி 2023 சனி 07:00 | பார்வைகள் : 11444
ஜனாதிபதி மக்ரோனின் அரசாங்கம் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்துள்ளது. போதிய ஆதரவு வாக்குகள் இல்லாததால் சபாநாயகர் அதனை நிராகரித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கான வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது. 289 வாக்குகள் கட்டாயம் தேவை என இருக்கும் நிலையில், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக 193 வாக்குகள் மட்டுமே பதிவாகியது.
இதனால் 18 ஆவது தடவையாக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
பிரதமர் Élisabeth Borne, கடந்த புதன்கிழமை 49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி, வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தார். பெருபான்மை இல்லாத மக்ரோனின் அரசாங்கம் இதனை அடிக்கடி பயன்படுத்துவதாக குற்றம்சாட்டும் இடதுசாரி கட்சியினரே மேற்படி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டுவந்திருந்தனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan