பரிஸ் : பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட ஒருவர் கைது!

30 புரட்டாசி 2023 சனி 14:36 | பார்வைகள் : 10487
பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
21 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாதிகள் இருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், ஜிகாதிப் பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் ஈர்க்கப்பட்டு அதேபோன்ற தாக்குதல் ஒன்றை நிகழ்த்த திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை இல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த நபர், மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக கடந்த மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் Alpes-Maritimes மற்றும் Seine-Saint-Denis நகரங்களில் இருந்து இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களும் இதேபோன்று தாக்குதல் நடத்தும் முனைப்புடன் இருந்ததாகவும், அவ்விருவருடனும் நேற்று கைது செய்யப்பட்ட குறித்த நபர் தொடர்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1