மூன்று வயதுக் குழந்தை அடித்துக் கொலை. தாயாரும், காதலனும் கைது.
26 புரட்டாசி 2023 செவ்வாய் 11:26 | பார்வைகள் : 15512
பிரான்சின் Conches-en-Ouche பகுதியில் உள்ள Eure என்னும் இடத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் மருத்துவர்களின் அவசர பிரிவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. தங்கள் குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதாக அந்த தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து குறித்த இடத்திற்கு நேரடியாக சென்ற மருத்துவக் குழு அந்த குழந்தையை, Seine-Maritimeல், Rouen பகுதியில் உள்ள Charles-Nicolle மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றுள்ளது.
நேற்று இரவு சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துள்ளது. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் மிகக் கொடுமையாக குழந்தை தாக்கப்பட்டதால் மாரடைப்பு ஏற்பட்டது என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குழந்தையின் தாயும், அவரின் காதலனும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை முதல் குறித்த மூன்று வயதுக் குழந்தை பாலர் பாடசாலைக்கு வரவில்லை எனவும், அதற்கு முன்னர் வந்த போது குழந்தையின் உடலில் காயங்கள் இருந்தன எனவும், பாடசாலையில் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே குழந்தை நீண்ட நாட்கள் தாயாரினதும், அவரின் காதலனினதும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்னும் சந்தேகம் தமக்கு உள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan