உடற்பயிற்சி கல்வியில் ஈடுபட்டிருந்த மாணவி - மயங்கி விழுந்து சாவு!
28 புரட்டாசி 2023 வியாழன் 16:49 | பார்வைகள் : 13144
பாடசாலையில் உடற்பயிற்சி கல்வியில் ஈடுபடுட்டிருந்த 12 வயதுச் சிறுமி ஒருவர் மயங்கி விழுந்து சாவடைந்துள்ளார்..
Neuilly-Saint-Front (Aisne) நகரில் நேற்று புதன்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஐந்தாம் ஆண்டு மாணவி ஒருவரே இவ்வாறு மயங்கி விழுந்து சாவடைந்துள்ளார். உடனடியாக மருத்துவக்குழுவினர் அழைக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தியிருந்த போதும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
மருத்துவமனைக்கு சிறுமி கொண்டுசெல்லப்பட்ட வழியில் அவர் சாவடைந்துள்ளதாகவும், இச்சம்பவம் அங்கு பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கான உளநல சிகிச்சை மையங்கள் அங்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan