மஹிந்த ஆபத்தான நிலையில் இருப்பதாக அரசியல் மட்டத்தில் பரபரப்பு

27 புரட்டாசி 2023 புதன் 15:22 | பார்வைகள் : 8327
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசியல் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.
எனினும் மஹிந்த ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக ராஜபக்ஷ குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சமூக வலைத்தளங்களில் மஹிந்தவின் ஆபத்தான நிலைமை குறித்து சிங்களவர்கள் பதிவுகளை இட்டு வருகின்றனர்.
எனினும் மஹிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறித்து எந்தவொரு வைத்தியசாலையும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமானவராக கருதப்படும் அமைச்சர் டி.வி.சானக்கவின் மாமனாரின் இறுதிச் சடங்கில் மஹிந்த கலந்து கொள்ளவில்லை.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை காரணமாக இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1