Paristamil Navigation Paristamil advert login

'லியோ' படக் குழுவினர்களின் அதிரடி அறிவிப்பு..!

'லியோ' படக் குழுவினர்களின் அதிரடி அறிவிப்பு..!

27 புரட்டாசி 2023 புதன் 13:45 | பார்வைகள் : 5730


தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் திடீரென தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த விழா ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ‘லியோ’ இசை வெளியீட்டு விழா ரத்தானதால் அதிருப்தியில் இருக்கும் ரசிகர்களை திருப்திபடுத்துவதற்காக சூப்பர் அறிவிப்பு ஒன்றை ‘லியோ’ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதாவது ‘லியோ’ படத்தின் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது சிங்கள் பாடல் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

படாஸ் என்ற இந்த பாடல் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இசை வெளியீட்டு விழா ரத்துக்கு பதிலாக அடுத்தடுத்து இந்த படத்தின் அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்கள் ஓரளவு அதிருப்தியை மறந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் இசையில் உருவான இந்த இரண்டாவது சிங்கிள் பாடலும் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்