Paristamil Navigation Paristamil advert login

சோம்ப்ஸ்-எலிசேயில் terrasse அமைப்பதில் கட்டுப்பாடு!

சோம்ப்ஸ்-எலிசேயில் terrasse  அமைப்பதில் கட்டுப்பாடு!

27 புரட்டாசி 2023 புதன் 09:16 | பார்வைகள் : 18545


உலகின் அழகிய வீதி என வர்ணிக்கப்படும் சோம்ப்ஸ்-எலிசேயில் (Champs-Elysées) உள்ள கடைகளுக்கு முற்றங்கள் (terrasse) அமைப்பதில் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

பரிசில் இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டின் கோடை காலத்தின் போது, சோம்ப்ஸ்-எலிசேயில் உள்ள கடைகளுக்கு ஒரே நிறத்தில் ஒரே அளவிலான முற்றங்கள் மட்டுமே அமைக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய வருடங்கள் போன்று, வெவ்வேறு அளவுடைய முற்றங்கள், வெவ்வேறு நிறங்கள், வீதிகளை குறுக்கறுக்கும் மின் கம்பிகள், விளக்குகள் போன்ற பாதசாரிகளுக்கு தொல்லை ஏற்படுத்தும் நடைமுறைகள் முற்றாக நிறுத்தப்பட உள்ளது. 

சோம்ப்ஸ்-எலிசேயில் உள்ள உணவகங்கள், அருந்தகங்கள், விடுதிகள் என மொத்தம் 19 கடைகளுக்கு இந்த முற்றம் அமைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அவை அமைக்கப்பட முடியும். அனைத்து கடைகளுக்கும் ஒரே அளவில், ஒரே வண்ணத்தில் மட்டுமே அவை உருவாக்க முடியும். இந்த வடிவமைப்பை ‘ஒலிம்பிக் 2024’ ஆம் ஆண்டு சபை வடிவமைத்துக் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வர்த்தக‌ விளம்பரங்கள்