Montparnasse நிலையத்தில் 5 மணிநேரத்துக்கு மேலாக போக்குவரத்து தாமதம்!
24 புரட்டாசி 2023 ஞாயிறு 13:43 | பார்வைகள் : 12575
Montparnasse நிலையத்தை வந்தடையும் தொடருந்துகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 30 நிமிடங்கள் முதல் 5 மணிநேர தாமதம் வரை பதிவாகியுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்கு பின்னர் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக SNCF இடம் கேட்டறிந்தபோது, Massy-Palaiseau (Essonne) நகரில் உள்ள மின்வழங்கியில் ஏற்பட்ட பழுது காரணமாகவே இந்த தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பிரான்சின் தென்மேற்கு பிராந்தியத்தில் இருந்து பரிசை நோக்கி வரும் தொடருந்துகளே இந்த தாமதத்தைச் சந்தித்துள்ளன.
Bordeaux, Hendaye, Toulouse ஆகிய நகரங்களில் இருந்து பரிசுக்கு வரும் பயணிகள் பெரும் தாமதத்தினை சந்தித்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan