Paristamil Navigation Paristamil advert login

புறப்பட்டார் பாப்பரசர்!

புறப்பட்டார் பாப்பரசர்!

23 புரட்டாசி 2023 சனி 17:42 | பார்வைகள் : 15730


இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தை முடிந்துக்கொண்டு பரிசுத்த பாப்பரசர் சற்று முன்னர் பிரான்சில் இருந்து புறப்பட்டுள்ளார்.

மார்செய் நகர விமான நிலையத்துக்கு சற்று முன்னர் வருகை தந்த பாப்பரசர், அவரது குழுவினரோடு வத்திக்கான் நாட்டுக்கு பயணித்தார். அவருடன் வருகை தந்த ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் விமான நிலையத்தில் வைத்து பாப்பரசரின் வருகைக்கு நன்றி தெரிவித்ததோடு, வழியனுப்பியும் வைத்தார். 

பின்னர் 7.15 மணிக்கு அவரது விமானம் புறப்பட்டது. 

அகதிகள் மீது மனிதாபிமான நடவடிக்கைகள் வேண்டும் என வலியுறுத்தியிருந்த அவர், இன்று காலை மாபெரும் மதக்கூட்டம் ஒன்றுக்கு தலைமையேற்றிருந்தார்.. அதில் 70,000 பேர் வரை பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்