பிரான்சுக்கு நன்றி தெரிவித்த மன்னர் சாள்ஸ் தம்பதிகள்!
23 புரட்டாசி 2023 சனி 16:52 | பார்வைகள் : 13682
பிரான்சுக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நாடு திரும்பியுள்ள இங்கிலாந்து மன்னர் சாள்ஸ், பிரான்சுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களும் மன்னர் சாள்ஸ் மற்றும் அவரது மனைவி அரசியார் கமீலா ஆகிய இருவரும் பிரான்சுக்கு முதன்முறையாக உத்தியோகபூர்வ அரச பயணத்தை மேற்கொண்டிருந்தனர். அவர்களை பிரான்ஸ் சிறப்பாக வரவேற்றதற்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
The Royal Family எனும் X (Twitter) கணக்கின் ஊடகா சிறிய காணொளி ஒன்றை பகிர்ந்த அவர்கள், ‘எம்மை வரவேற்ற பிரான்சுக்கு எங்களது நன்றிகள்’ என தெரிவித்தனர். மூன்று நாட்கள் சுற்றுப்பயணத்தில் இடம்பெற்ற அனைத்து நிகழ்வுகளையும் தொகுத்து சிறிய காணொளியாக பகிர்ந்ததுடன், “கடந்த மூன்று நாட்களும் எங்களுடைய நட்பின் அடையாளங்களை கொண்டாடினோம். நிலையான நட்புறவை நாம் உறுதிப்படுத்தினோம்” என்பதை ஆங்கிலத்தில் குறிப்பிட்டதுடன்,“உங்களை நாங்கள் மீண்டும் சந்திப்போம் என எதிர்பார்க்கிறோம்” என பிரெஞ்சிலும் (Nous espérons vous revoir tous bientôt.) அவர்கள் குறிப்பிட்டு கீழே Charles R. மற்றும் Camilla R. என தங்களது பெயர்களையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan