மின்சார கட்டணத்தில் கட்டுப்பாடு - ஜனாதிபதி உறுதி
26 புரட்டாசி 2023 செவ்வாய் 07:13 | பார்வைகள் : 21174
மின்சாரக்கட்டண விலையேற்றத்தின் மீது கட்டுப்பாடு கொண்டுவருவோம் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உறுதியளித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மாளிகையான எலிசேயில் இருந்து 'சூழலியல் மாற்றம்' குறித்து நாட்டுமக்களுக்கு உரையாற்றியிருந்தார். பொது போக்குவரத்து, மின் உற்பத்தி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக உரையாற்றியிருந்த அவர், மின்சார கட்டண உயர்வு குறித்தும் சில தகவல்களை வெளியிட்டிருந்தார். அதில், வரும் ஒக்டோபர் மாதத்தில் மின்சார கட்டணத்தின் மீது கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும் என உறுதியளித்தார். மின்சார உற்பத்திச் செலவு, வாங்கும் செலவு அதன் விற்பனைவிலையுடன் ஒத்து இருக்கும் எனவும், இலாபமற்ற முறையை கடைப்பிடிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த ஒக்டோபரில் மக்கள் பாரதூரமற்ற, நிலையான கட்டணம் ஒன்றின் மூலம் பலனடைவார்கள் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan