வெடிகுண்டு மிரட்டல் - பரிஸ் - மார்செய் போட்டிகளுக்கு இடையே மைதானத்தில் ஒருவர் கைது
26 புரட்டாசி 2023 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 11708
கடந்த ஞாயிற்றுக்கிழமை Parc des Princes மைதானத்தில் இடம்பெற்ற பரிஸ் - மார்செய் (PSG-OM) அணிகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டியின் போது, நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
காவல்துறையினரின் கண்காணிப்பு ‘S’ பட்டியலில் உள்ள ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மைதானத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ஒன்றை அவர் விடுத்திருந்ததாகவும், 2 மணிநேரத்துக்கு மேலாக தேடுதல் வேட்டை இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கைதான நபர் முன்னதாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தார் எனவும், பரிசில் வைத்து சுற்றுலாப்பயணி ஒருவரைத் தாக்கியிருந்தார்.
1994 ஆம் ஆண்டு பிறந்த 29 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan