Paristamil Navigation Paristamil advert login

PGS வீரர்களைச் சந்திக்கும் மன்னர் சாள்ஸ்

PGS வீரர்களைச் சந்திக்கும் மன்னர் சாள்ஸ்

21 புரட்டாசி 2023 வியாழன் 13:35 | பார்வைகள் : 14855


இங்கிலாது மன்னர் சாள்ஸ், இன்று வியாழக்கிழமை  இரண்டாவது நாள் அரச சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இன்று பல்வேறு நடவடிக்கைகளில் அவர் ஈடுபட உள்ளார்.

இன்று காலை செனட் சபைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சாள்ஸ் மன்னர் மற்றும் அவரது மனைவி அரசியார் கமீலா ஆகிய இருவரும், ஒருமணிநேரம் வரை அங்கு நேரத்தைச் செலவிட்டனர். சாள்ஸ் மன்னருக்கு நீண்ட நிமிடங்கள் கைதட்டல் பாராட்டு வழங்கப்பட்டது. காலநிலை மாற்றம் மற்றும் இரு நாடுகளின் நட்புறவை பேணுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அதில் கலந்துரையாடப்பட்டது.

பின்னர் அங்கிருந்து தற்போது Saint-Denis நகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். அங்கு பல்வேறு விளையாட்டு அமைப்புகள் இணைந்து அவர்களுடன் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். அதையடுத்து, PSG விளையாட்டுக் கழகத்தின் வீரர்களை அவர்கள் சந்திக்க உள்ளனர்.

முன்னரே அறிவிக்கப்படாத திடீர் ஏற்பாடாக இந்த சந்திப்பு இடம்பெற உள்ளது. வீரர்களால் வழங்கப்படும் PSG கழக சீருடையினை மன்னர் சாள்ஸ் பெற்றுக்கொள்ள உள்ளதாக அறிய முடிகிறது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்