43 கிலோ கொக்கைன் போதைப்பொருள் மீட்பு - பெண் உள்ளிட்ட மூவர் கைது
23 புரட்டாசி 2023 சனி 05:55 | பார்வைகள் : 13096
கொக்கைன் கடத்தலில் ஈடுபட்டிருந்த பெண் உள்ளிட்ட மூவரை மார்செய் நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
செப்டம்பர் 18 ஆம் திகதி இக்கைது சம்பவம் மார்செய் நகரிந் 10 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள வீடொன்றில் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் 43 கிலோ கொக்கைன் போதைப்பொருளையும், €50,550 யூரோக்கள் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
19 தொடக்கம் 25 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெண் ஒருவரும் உள்ளதாக அறிய முடிகிறது.
கைதான மூவரில் ஒருவர் போதைப்பொருள் கடத்தலில் காவல்துறையினரால் முன்னதாகவே அறியப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan