காவல்துறை வீரரை மகிழுந்தினால் இழுத்துச் சென்ற நபர் - துப்பாக்கிச்சூடு
22 புரட்டாசி 2023 வெள்ளி 14:27 | பார்வைகள் : 14862
காவல்துறை வீரர் ஒருவரை மகிழுந்து சாரதி ஒருவர் மோதி தள்ளி, அவரை வீதியில் இழுத்துச் சென்றுள்ளார். சாரதி காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை Sochaux (Doubs) நகரில் இடம்பெற்றுள்ளது. வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் மகிழுந்தில் பயணிப்பதை பார்த்துவிட்டு, அவரை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் அவர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார். தடுத்து நிறுத்த முற்பட்ட அதிகாரியை மோதித்தள்ளிவிட்டு, அவரை மகிழுந்தினால் சில மீற்றர் தூரம் இழுத்த சென்றுள்ளார்.
இதால், இதனை தடுக்க முற்பட்ட மற்றொரு அதிகாரி, சாரதி மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் காயமடைந்த சாரதி இறுதியாக மகிழுந்தை நிறுத்தினார்.
காயமடைந்த காவல்துறை வீரர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். மகிழுந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan