Aulnay-sous-Bois : உணவு விநியோகம் செய்பவரை மகிழுந்தினால் மோதி தள்ளிய ஒருவர் கைது

17 புரட்டாசி 2023 ஞாயிறு 16:32 | பார்வைகள் : 15883
உணவு விநியோகம் செய்யும் ஒருவரை நபர் ஒருவர் தனது மகிழுந்தினால் மோதி தள்ளியுள்ளார். இச்சம்பவம் Aulnay-sous-Bois (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது.
Camille-Pelletan எனும் வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுக்கு வெள்ளிக்கிழமை மாலை Pizza உணவு விநியோகிக்க ஒருவர் வருகை தந்துள்ளார். வாகன தரிப்பிடத்தில் அவர் தனது மகிழுந்தை நிறுத்தி விட்டுச் செல்ல, அக்கட்டிடத்தில் வசிக்கும் ஒருவருக்கும் குறித்த நபருக்கும் இடையே இது தொடர்பாக வாக்குவாதம் எழுந்துள்ளது. சில நிமிடங்களில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.
இந்த மோதலின் முடிவில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் தனது மகிழுந்து மூலம் உணவு விநியோகம் செய்யும் நபரை மோதித்தள்ளியுள்ளார். இதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
அவரை SAMU மருத்துவக்குழுவினர் Clichy (Hauts-de-Seine) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக் அனுமதித்தனர்.
அதன்பின்னர் தாக்குதல் நடத்திய நபர் தாமாக Sevran நகர காவல்நிலையத்துக்குச் சென்று சரணடைந்துள்ளார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1