இல் து பிரான்ஸ் மக்களுக்கு ஊதிய உயர்வு! - மாகாண முதல்வர் ஆலோசனை
19 புரட்டாசி 2023 செவ்வாய் 18:07 | பார்வைகள் : 14915
இல் து பிரான்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தை (SMIC) அதிகரிக்கும் திட்டம் ஒன்றை மாகாண முதல்வர் Valérie Pécresse பரிந்துரைத்துள்ளார்.
பிரான்சில் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் இல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள் செலவு அதிகமாகும். பரிசில் வாடகைத் தொகை போன்று Limoges நகரில் செலுத்தப்படுவதில்லை. இங்கு செலவு அதிகம் என்பதுபோல் வருமானமும் அதிகமாக இருக்க வேண்டும் என தெரிவித்த மாகாண முதல்வர், அடிப்படை ஊதியத்தை 9% சதவீதத்தால் அதிகரிக்க பரிந்துரை செய்துள்ளார்.
சில அவசியாமான ஊழியர்கள் இல் து பிரான்சில் வசிக்க முடியாமல் இங்கிருந்து வெளியேறுகின்றனர். அதன் பிரதான காரணம் செலவீனங்களுக்கு ஏற்றால்போல் வருமானம் இல்லை என்பதே எனவும் அவர் தெரிவித்தார்.
1747.20 யூரோக்களாக இருக்கும் அடிப்படை ஊதியத்தை 1904.44 யூரோக்களாக உயர்த்தும் யோசனை ஒன்றை அவர் முன்மொழிந்துள்ளதாகவும் மாகாண முதல்வர் தெரிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan