இலங்கையில் பைக்குள் மீட்கப்பட்ட சடலம் - 6 பேர் கைது
19 புரட்டாசி 2023 செவ்வாய் 14:21 | பார்வைகள் : 9845
சீதுவை - கிரிந்திகொட பகுதியில் தடுகம்ஓயாவில் பயணப்பையிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 15ஆம் திகதி குறித்த பகுதியில் பயணப்பையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய, சடலமாக மீட்கப்பட்ட நபர், மாராவில் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளுக்கமைய, கட்டானை பகுதியைச் சேர்ந்த 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் உணவகம் ஒன்றை நடத்திச் சென்ற நபர், அவரது இரண்டு மகன்கள் மற்றும் அங்கு பணியாற்றிய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சி.சி.ரி.வி காணொளி காட்சிகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள், குறித்த நபரை தமது உணவகத்துக்குள் அழைத்து சென்று தாக்கி கொலை செய்து, சடலத்தை பயணப்பையில் இட்டு தடுகம்ஓயாவில் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் மாராவில், மஹவௌ மற்றும் கட்டானை உள்ளிட்ட பகுதிகளில், வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பெற்று தருவதாக தெரிவித்து பணமோசடியில் ஈடுபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan