பரிஸ் : trottinettes இல் இருந்து மின்கலன்களை திருடிய ஆறு பேர் கைது!
19 புரட்டாசி 2023 செவ்வாய் 14:13 | பார்வைகள் : 17872
trottinettes என அழைக்கப்பட்டும் சிறிய ரக மின்கலத்தில் இயங்கும் வண்டிகளில் இருந்து மின்கலன்களை (Battery) திருடிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 14 ஆம் திகதி வியாழக்கிழமை அவர்கள் பரிசில் பல்வேறு பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர். பரிசில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த vélos மற்றும் trottinettes ஆகிய வண்டிகளில் இருந்து மின்கலன்களை திருடியுள்ளனர். காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் 56 கொள்கலன்கள் மீட்கப்பட்டன. ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வருடத்தின் கோடை கால ஆரம்பத்தில் இருந்து இந்த திருட்டில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
தரிப்பிடங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாடகை trottinettes வண்டிகளில் இருந்து இவர்கள் இரவு நேரங்களில் கொள்கலன்களை திருடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பரிஸ் தவிர்த்து Le Havre பகுதிகளிலும் இவர்கள் திருட்டில் ஈடுபட்டிருந்தனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan