கனடாவில் இரு சிறுமிகளின் கொடூரச் சம்பவம்

19 புரட்டாசி 2023 செவ்வாய் 12:39 | பார்வைகள் : 11498
கனடாவின் வோன் பகுதியில் அமைந்துள்ள வாகனத் தரிப்பிடமொன்றில் 13 வயது இரு சிறுமிகள் மற்றுமொரு சிறுமியை பல தடவைகள் கத்தியால் குத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ருத்தபோர்ட் வீதி மற்றும் 400ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலை என்பனவற்றுக்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தியை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த சிறுமிக்கு உயிராபத்து கிடையாது என வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பில் சில காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலை மேற்கொண்ட ஒரு சிறுமி கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1