குளியல் தொட்டியில் இறந்துகிடந்த சிறுவன் - தந்தை கைது!!
15 புரட்டாசி 2023 வெள்ளி 16:00 | பார்வைகள் : 20999
குளியல் தொட்டியில் இறந்து கிடந்த நிலையில் ஏழு வயதுச் சிறுவன் ஒருவனது சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை மாலை Perpignan நகரில் உள்ள வீடொன்றில் இருந்து இந்த சடலம் மீட்கப்பட்டது. மாலை 6.25 மணி அளவில் அங்குள்ள இறுதிச் சடங்கு ஏற்பாட்டாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து இத்தகவல் காவல்துறையினருக்கு தெரியவந்தது. தனது மகனை நல்லடக்கம் செய்யவேண்டும் என தெரிவித்த சிறுவனின் தந்தை, முன்னுக்குப் பின்னர் முரணான தகவல்களை வழங்கியதை அடுத்து, அவர்கள் காவல்துறையினரை அழைத்துள்ளனர்.
அதையடுத்து குறித்த வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர், வீட்டின் குளியலறையில் இறந்துகிடந்த 7 வயதுச் சிறுவனின் சடலத்தை மீட்டனர்.
அவனது உடலின் ஒருபகுதி உறைந்து காணப்பட்டது. அத்தோடு அவன் தாக்கப்பட்டுள்ளமைக்குரிய அடையாளங்களும் இருந்துள்ளன.
சடலம் மீட்கப்பட்டு உடற்கூறு பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan