Paristamil Navigation Paristamil advert login

ரொனால்டோவின் அதிரடி ஆட்டம் - அல் நஸர் த்ரில் வெற்றி

ரொனால்டோவின் அதிரடி ஆட்டம் - அல் நஸர் த்ரில் வெற்றி

17 புரட்டாசி 2023 ஞாயிறு 08:51 | பார்வைகள் : 7359


அல் ரேட் அணிக்கு எதிரான போட்டியில் அல் நஸர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

சவுதி ப்ரோ லீக் தொடரில் அல் நஸர் - அல் ரேட் அணிகள் மோதின. 

கிங் அப்துல்லா ஸ்போர்ட் சிட்டி மைதானத்தில் இந்தப் போட்டி நடந்தது.

ஆட்டத்தின் 45+1வது நிமிடத்தில் அல் நஸரின் சாடியோ மானே முதல் கோல் அடித்தார். 

அதன் பின்னர் மற்றொரு வீரரான தலிஸ்கா 49வது நிமிடத்தில் அபாரமான கோல் அடித்தார். 

அடுத்து 78வது நிமிடத்தில் தன்னிடம் வந்த லாவகமாக கையாண்ட ரொனால்டோ, எதிரணியை ஏமாற்றி கோல் அடித்தார். 

இதற்கு உடனடியாக அல் ரேட் அணியால் பதிலடி கொடுக்க முடியவில்லை. 

ஆட்டத்தின் 89வது நிமிடத்தில் அல் ரேட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. 

அந்த அணியின் மொஹமது ஃப்பௌஸர் பெனால்டியை கோலாக மாற்றினார். 

எனினும் மேற்கொண்டு அல் ரேட் அணியால் கோல் அடிக்க முடியாததால் அல் நஸர் 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் அல் நஸர் அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. 

அல் ஹிலால் அணி முதலிடத்தில் உள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்