Yvelines நான்காவது தளத்தில் இருந்து விழுந்த சிறுவன் பலி
16 புரட்டாசி 2023 சனி 18:11 | பார்வைகள் : 16081
நான்காவது தளத்தில் இருந்து விழுந்த சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளான்.
Les Mureaux (Yvelines) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை மாலை இரவு 8 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
4 வயதுடைய சிறுவன் ஒருவன் கட்டிடத்தின் நான்காவது தளத்தில் இருந்து கீழே விழுந்துள்ளான்.
இச்சம்பவத்தின் போது 28 வயதுடைய தந்தை வீட்டில் இருக்கவில்லை எனவும், 35 வயதுடைய தாய் அருகில்உள்ள வீடொன்றில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த சிறுவன், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவன் பலியாகியுள்ளான்.
சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுளது. சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan