கனடாவில் அதிகரிக்கும் பொருட்களின் விலை - சில்லறை விற்பனையாளர்கள் குற்றச்சாட்டு

16 புரட்டாசி 2023 சனி 12:37 | பார்வைகள் : 10637
உக்ரைன் போர், பல்வேறு வெளிநாட்டு காரணிகள், உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு போன்றவற்றால் காரணங்களால் கனடாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
அதனால் சில்லறை விற்பனையாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கனடாவில் உணவு பொருட்களின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஜூலை மாதத்தில் 8.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
மேலும் பணவீக்க விகிதமானது 3.3 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
விலைவாசி தொடர்பில் தெரிவிக்கையில் பிரதமர் ரூட்டோ, வால்மார்ட், காஸ்ட்கோ உள்ளிட்ட மேலும் 5 பெரிய வணிக நிறுவனங்களிடம் விலைவாசி உயர்வுக்கு தீர்வு காணும் வழிமுறைகளை கேட்டுள்ளேன்.
இத்தகைய பெரிய நிறுவனங்கள் வழங்கும் தீர்வுகள் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பாதிப்புகளை குறைக்கவில்லை.
நிறுவனங்கள் மீதான வரி விதிப்பு போன்ற எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க தயங்க மாட்டோம் என பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ தெரிவித்துள்ளார்.
மேலும் வாழ்க்கை செலவு நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தடுமாறும் மக்களுக்கு உதவும் விதமாக புதிய வாடகை அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான விற்பனை வரி தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கஷ்டப்படும் போது பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட் லாபம் ஈட்டுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது.
குடும்பங்களுக்கு உணவளிக்க போராடும் மக்களிடம் லாபம் சம்பாதிக்க கூடாது என்றும் பிரதமர் ரூட்டோ தெரிவித்துள்ளார்.
கார்பன் வரியை தற்காலிகமாக நீக்குவது, பிளாஸ்டிக் பேக்கேஜிங் இலக்குகளை ரத்து செய்வது ஆகியவற்றையும் ரூட்டோ குறிப்பிட்டார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1