அமெரிக்க மாடல் அழகி செய்த நெகிழ்ச்சியான செயல்

14 புரட்டாசி 2023 வியாழன் 11:09 | பார்வைகள் : 11076
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியை சேர்ந்தவர் கரோலினா கீட்ஸ்(29).
10க்கும் மேற்பட்ட மாடலிங் இதழ்களின் அட்டை படங்களில் வந்துள்ள கரோலினா கீட்ஸ்.
தற்பொழுது தனக்கான துணைவரை தேடி பல டேட்டிங் ஆப்களை முயற்சித்து பார்த்துள்ளார்.
ஆனால் அந்த வழிமுறை தனக்கு உதவாது என்பதை அறிந்து தற்போது நூதன முறையில் தனக்கான துணைவரை தேர்ந்தெடுக்க முயற்சித்து வருகிறார்.
இதற்காக தினமும் அமெரிக்காவின் முக்கிய சாலையில் “தனக்கான கணவனை தேடி வருகிறேன்” என்று எழுதப்பட்ட பதாகையுடன் நின்று வருகிறார்.
சமீபத்தில் ஆண் ஒருவரிடம் பேசி தனது செல்போன் எண்களை பகிர்ந்து கொண்ட கரோலினா தனக்கான வரை கண்டுபிடித்து விட்டேன் என்று நினைக்கிறேன்.
இருவரும் பேசி வருகிறோம் என தெரிவித்து இருந்தார்.
ஆனால் அந்த நபர் தனக்கு சரியானவர் அல்ல என்பதை அறிந்து கொண்டேன் என தெரிவித்து, மீண்டும் சாலையில் பதாகையுடன் நிற்க தொடங்கியுள்ளார்.
இந்த வழிமுறை மூலம் தனக்கு நல்ல துணைவர் ஒருவர் நிச்சயமாக கிடைப்பார் என நம்புவதாகவும், தனது முயற்சியை அதுவரை கைவிடப்போவது இல்லை என்றும் கரோலினா கீட்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கணவரை தேடி சாலைக்கு வந்த மாடல் அழகியின் வீடியோ சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1