Mantes-la-Jolie : மேம்பாலத்தில் இருந்து குதித்த நபர் பலி
14 புரட்டாசி 2023 வியாழன் 07:52 | பார்வைகள் : 16367
மேம்பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். Mantes-la-Jolie (Yvelines) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 44 வயதுடைய ஒருவர் அன்றைய இரவு, Quai des Cordeliers அருகே உள்ள வீதி ஒன்றில் நடந்து செனருகொண்டிருந்த போது இருவர் அவர்மீது தாக்குதல் நடத்த முற்பட்டனர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய குறித்த நபர், அங்குள்ள மேம்பாலம் வழியாக தப்பி ஓடியுள்ளார்.
அப்போது தாக்குதலாளிகள் அவரை நெருங்கிவிட, மேம்பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்துள்ளார்.
கிட்டத்தட்ட 20 மீற்றர் உயரத்தில் இருந்து ஆற்றில் விழுந்த குறித்த நபர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan