குழு மோதலில் சிறுவன் படுகாயம் - கத்திக்குத்து தாக்குதல்
14 புரட்டாசி 2023 வியாழன் 07:00 | பார்வைகள் : 13441
Corbeil-Essonnes (Essonne) நகரில் இடம்பெற்ற குழு மோதல் ஒன்றில் சிறுவன்ஒருவன் படுகாயமடைந்துள்ளான். கத்திக்குத்துக்கு இலக்கான அவன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
நேற்று புதன்கிழமை இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. குறித்த நகரில் உள்ளTarterêts மற்றும் Montconseil ஆகிய இரு பிராந்தியங்களைச் சேர்ந்த சிறுவர்கள்மற்றும் இளைஞர்களிடையே இந்த மோதல் வெடித்திருந்தது.
இந்த மோதலில் 15 வயதுடைய சிறுவன் ஒருவன் மீது இரு தடவைகள் கத்திக்குத்துதாக்குதல் இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளான்.
மோதலில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan