ஒரே உணவகத்தில் உணவருந்தியவர்களில் ஒரு பெண் பலி, ஒன்பது பேர் மருத்துவமனையில்.
13 புரட்டாசி 2023 புதன் 16:04 | பார்வைகள் : 17108
Bordeaux நகரில் உள்ள Tchin Tchin Wine Bar என்னும் உணவகத்தில் கடந்த நான்காம் திகதி முதல் பத்தாம் திகதி வரை "sardines en bocal" (கண்ணாடிக் குவளையில் பதப்படுத்தப்பட்டு அடைக்கப்பட்ட சூடைமீன்) உணவை எடுத்துக் கொண்டுவர்களில் parisசை சேர்ந்த ஒருபெண் பலியாக ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை l'Agence régionale de santé (ARS) தெரிவித்துள்ளது. குறித்த உணவகத்தில் குறித்த காலப் பகுதியில் உணவருந்தியவர்கள் மிகவும் விழிப்பாக இருக்கும்படியும் l'Agence régionale de santé (ARS) கேட்டுக்கொண்டுள்ளது.
அமெரிக்கா, கனடா, ஜெர்மன் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் Paris மற்றும் Bordeaux மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது பேரில் அடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உணவில் இருந்து பற்றிக் கொண்ட கிருமிகளே அவர்களின் நோய்க்கும், மரணத்துக்கும் காரணம் என ARS நிறுவனம் தெரிவித்துள்ளது.
(மிகுதியான விபரங்கள் paristamil.comமில் தொடரும்)
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan