நிபா வைரஸ் - தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை

13 புரட்டாசி 2023 புதன் 21:16 | பார்வைகள் : 9313
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
அதில், நோயுற்ற, வைரஸ் அறிகுறி உள்ளவர்களை கையாண்ட பின் 20 நொடிகள் சோப்பினால் கை கழுவிய பின் மற்ற பணிகளை சுகாதார ஊழியர்கள் செய்ய வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட சுகாதாரத் துறை ஊழியர்கள் பிபிஇ கிட், முகக்கவசம், கையுறை அணிவது அவசியம்.
மருத்துவ உபகரணங்களை தொடர்ச்சியாக கிருமி நீக்கம் செய்து பயன்படுத்துவது அவசியம். நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட சிரிஞ்ச் மற்றும் ஊசி போன்றவற்றை முறையாக அப்புறப்படுத்துவது அவசியம் .என்று தெரிவிக்கப்பட்டுளள்து.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1