Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்கு தடை விதிப்பு!

அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்கு தடை விதிப்பு!

11 புரட்டாசி 2023 திங்கள் 09:12 | பார்வைகள் : 10490


அமெரிக்காவில் தற்போதைய காலக்கட்டங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.

கடந்த 6 ஆம் திகதி அங்குள்ள அல்புகெர்கி பகுதியின் கூடைப்பந்து மைதானத்துக்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இதுபோன்ற துப்பாக்கி வன்முறையை தவிர்க்க நியூ மெக்சிகோ மாகாண கவர்னர் புதிதாக நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதில் நியூ மெக்சிகோ மாகாணத்துக்குட்பட்ட பகுதிகளில் அடுத்த 30 நாட்களுக்கு துப்பாக்கிகளை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

அதன்பிறகு மீண்டும் இந்த உத்தரவு நீட்டிக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்