ஒவ்வொரு மாணவருக்கும் முன் ஆசிரியர்கள் இல்லை. Snes-FSU.
11 புரட்டாசி 2023 திங்கள் 08:05 | பார்வைகள் : 15653
புதிய கல்வியாண்டு ஆரம்பித்து இரண்டாவது வாரம் தொடங்கியுள்ள நிலையில் Snes-FSU என்னும் ஆசிரியர் சம்மேளனம் தங்களின் ஆய்வறிக்கை ஒன்றைறை வெளியிட்டுள்ளது.
அவர்களின் ஆய்வின்படி பிரான்சின் பிரதான நகரங்களில் உள்ள 500 நடுநிலை, மேல்நிலைப் பாடசாலைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் குறைந்தது ஒரு பாடசாலையில் ஒரு பிரதான வகுப்புக்கான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வியாண்டு ஆரம்பிப்பதற்கு முன்னர் அரசதலைவர் Emmanuel Macron அவர்களும், கல்வி அமைச்சர் Gabriel Attal அவர்களும் "புதிய கல்வியாண்டில் ஒவ்வொரு மாணவருக்கு முன்பும் ஒரு ஆசிரியர் இருப்பார்" என்னும் உறுதிமொழி இன்று கேள்விக்குறியாக மாறியுள்ளது என கல்விச் சமூகம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறை என்பது ஒரு சமூகத்தின் அடுத்த தலைமுறைக்கு இழைக்கப்படும் பாரிய பின்விளைவு என கல்விச் சமூகம் அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan